விஜய், அஜித், விக்ரம் முவரும் நிராகரித்து சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் !
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.
மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 10 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்து வெளியிட்டார் கவுதம் மேனன். இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் 2ம் பக்கம் குறித்த எந்த பேச்சும் இல்லை.
2003ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்க காக்க. சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படம் தமிழ் சினிமா பாக்ஸில் பெரிய வசூலை குவித்தது. அப்படத்தின் முலம் நடிகர் சூர்யாவின் திரைபயணமே மாறியது என கூறலாம்.
அப்படி ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக அமைந்த இப்படத்தை டாப் முன்னணி நடிகர்கள் நிராகரித்தது எத்தனை பேருக்கு தெரியும். கௌதம் மேனன் காக்க காக்க திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் என முவரிடமும் கூறினாராம்.
சில காரணங்கள் சொல்லி அவர்கள் இப்படத்தை நிராகரித்தால், பின்னர் நடிகை ஜோதிகா தான் சூர்யாவை சிபாரிசு செய்து அந்த கதையை அவரிடம் கூற வைத்துள்ளார். இப்படத்திற்காக கடின உழைப்பை போட்ட நடிகர் சூர்யாவிற்கு, அப்படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.