டில்லி vs ரோலக்ஸ்.. hint கொடுத்த சூர்யா.. escape ஆன கார்த்தி.. வைரலாகும் வீடியோ !
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக மேடையேறி பேசும் போது, டில்லியை ரோலக்ஸ் என்ன பண்ணலாம் என சூர்யா ரசிகர்களை பார்த்து கேட்க, ரசிகர்கள் ரியாக்ஷன் கொடுப்பதற்கு முன்னதாகவே முந்திக் கொண்ட நடிகர் கார்த்தி டில்லி ரோலக்ஸ் சண்டையெல்லாம் வீட்டிலேயே நிறைய போட்டுட்டோம் என்று எஸ்கேப் ஆகும்படி பேசினார். ஆனால், ரசிகர்கள் அதை நாங்க திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம் என கூச்சலிட, கண்டிப்பா காலம் அதற்கு பதில் சொல்லும் என சூர்யா பதில் கூறினார்.
இதனால, டில்லி vs ரோலக்ஸ் கிளாஷ் சீக்கிரமே வரும் என்பதற்கான hint கொடுத்து விட்டதாக இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Dilli vs Rolex fight ellam veetla neraya pottuttom 😂@Suriya_offl @Karthi_Offl#VaadiVaasal #Viruman pic.twitter.com/vm9dSpU3Wd
— 🔥 SURIYA the BOSS ™ 🔥 (@Suriya_the_Boss) August 4, 2022