'ரோலெக்ஸ்' ரோல் - லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல இவர்தானாம்.. வெளியானது விக்ரம் பட சீக்ரெட்

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுது.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 300 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது. விரைவில் இப்படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

இந்நிலையில், சூர்யா ரோலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம். அது குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜை தான் முதலில் ரோலெக்ஸ் கதாபாத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்தாராம்.

Suriya is not the first choice for rolex character said by lokesh kanagaraj

இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற கடவா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிருத்விராஜிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சியடைந்த அவர், என் பெயரை ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு சொல்லி இருப்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறினார்.

Share this post