Viral Video: அன்றே கணித்தார் சூர்யா.. 'நான் வில்லனாவும், கார்த்தி பட்டை போட்டு நல்ல பையனாவும் நடிக்கணும்'னு ஆசை'..

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

இதன் பின்னர், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

இதன் நடுவே, சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, ஷிவானி, மஹேஸ்வரி, காளிதாஸ் ஜெயராம் என ஒரு ரசிகர் பட்டாளமே நடித்தது. இதில் எதிர்பாராத சஸ்பென்ஸ் விதமாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

சூர்யா கதாபாத்திரத்தின் வெற்றியை தொடர்ந்து, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என ட்வீட் செய்திருந்தார்.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

விக்ரம் படத்தில் கைதி படத்தின் reference அதிகம் இருந்தது. இதனால், சூர்யா மற்றும் கார்த்தி நடிப்பை குறித்து அதிகம் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதியை கார்த்திக்கை வித்தியாசமான கோணத்தில் காட்டி ரசிகர்களுக்கு கொடுத்து ஹிட் கொடுத்துள்ளார்.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

இந்நிலையில், சூர்யாவின் பழைய இன்டர்வ்யூ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வீட்டில் தான் அமைதி என்றும், தம்பி கார்த்தி சேட்டை செய்வார். எனவே படத்திலாவது, தான் சைலன்ட் வில்லனாகவும், கார்த்தி பட்டை போட்ட முழு நேர நல்லவனாக இருக்கவேண்டும்.

Suriya interest about suriya in villan role and karthi in good role old video getting viral

ஒரு படமாவது அப்படி நடிக்கவேண்டும் என கூறியிருந்தார். அவரின் ஆசைப்படியே கைதி படத்தில் கார்த்தியை பட்டைபோட்ட நல்லவனாக காட்டிய லோகேஷ் விக்ரமில் சூர்யாவை வேற லெவல் கோரமான வில்லனாக சித்தரித்துள்ளார்.

Share this post