தேசிய விருது வென்றது குறித்து சுதா கொங்கரா, சூர்யா, ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி அறிக்கை !

2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. பெரிய எதிர்பார்பிற்கு இடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே பேரதரவை பெற்றது.
மேலும் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் குறிப்பாக இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என பலரும் இப்படம் வெளியானது முதலே விமர்சனம் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று 68வது தேசிய விருது குறித்த பட்டியல் அறிவிப்பு வெளியானது. அதில் சூரரை போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது. தற்போது இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரின் உதவி இயக்குநர்களுடன் கேக் வெட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் “நாம ஜெயிச்சுட்டோம் மாறா” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு, சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் ரசிகர்களுக்கு நன்றி கூறி நீண்ட பதிவை வெளியிட்டிருந்தனர்.