பிரபல தமிழ் இயக்குனரின் படத்தை தூசிதட்டி எடுக்கும் சூர்யா? ஹோ அப்போ விட்டத இப்போ எடுத்துட்டாரா?
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதுதவிர அவர் விக்ரம் படத்தின் அவர் நடித்த ரோலெக்ஸ் எனும் கேமியோ ரோலும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனால் சூர்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுதவிர டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு ஏராளமான படங்களை வரிசையில் வைத்துள்ள சூர்யா, அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். சூர்யா - ஹரி கூட்டணியில் இதுவரை வெளிவந்த 5 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் அருவா என்ற படத்திற்காக கடந்த 2020ம் ஆண்டு இணைந்தனர். அந்த சமயத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அப்படத்தின் பணிகளை மேற்கொண்டு தொடராமல் அப்படத்தை கிடப்பில் போட்டனர். அந்த படத்தை தான் தற்போது மீண்டும் தூசிதட்டி எடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.