நண்பர் விஜயகாந்த் 'விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க' வேண்டி வாழ்த்திய சூப்பர்ஸ்டார் !

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 40 வருட திரையுலக வாழ்க்கையில் 150 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

பின்னர், அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கிய விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். தற்போது உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

தீவிர உடல்நல குறைவால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Superstar rajinikanth tweets praying for vijayakanth health getting viral

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.

Share this post