"பணம், புகழ் எல்லாமே இருக்கு.. ஆன சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்ல.." சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வைரல் !

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், “வாழ்க்கையில் பணம் புகழ் எல்லாம் இருந்தும் சந்தோஷம் இல்லை என்றும் ஏன் என்றால் சந்தோஷம், நிம்மதி என்பது எவருக்கும் நிரந்தரம் கிடையாது” என கூறிய விஷயம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை, மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் அரசியல் நோக்கத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார். இது அப்போது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வில் இருந்து வந்தார்,பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் யோகாத சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோக மூலம் இனிய வெற்றியான வாழ்வு என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார்.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

அப்போது அந்த மேடையில், ‘என்னை பெரிய நடிகர் என்று எல்லோரும் சொன்னார்கள், இது எனக்கு பாராட்டா அல்லது விமர்சனமா என்று தெரியவில்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் மனதிருப்தி கொடுத்த இரண்டு படங்கள் ராகவேந்திரா, பாபா தான். இந்த இரண்டு படங்களிலும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்த மகான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்கு பிறகுதான் ராகவேந்திர சுவாமிகள் குறித்து பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்படி ஒரு மகான் இருந்தாரா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அதேபோல் பாபாவை பலரும் அறிந்து கொண்டார்கள்.

Superstar rajinikanth speech in recent function getting viral on social media

உடல் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு ரொம்ப முக்கியம். மருத்துவமனைக்கு செல்லாமலேயே நன்றாக நடமாடிக் கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விடவேண்டும். நான் கூட பலமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறேன். பணம், புகழை சேர்த்து வைத்துவிட்டு போவதை விட போகும்போது நோயாளியாக இல்லாமல் போவதுதான் முக்கியம். நான் கூட பணம் புகழ் பெரிய அரசியல்வாதிகள் என எல்லாரையும் பார்த்துவிட்டேன், ஆனால் சந்தோஷம் என்பது 10% கூட கிடையாது, ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி என்பது யாருக்குமே நிரந்தரமில்லை’ என அவர் கூறியுள்ளார்.

Share this post