'சுவாமியே சரணம் ஐயப்பா சபரிமலை' கோஷத்துடன் சபரிமலையில் சூப்பர் ஸ்டார்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. நேற்று, ஜெயிலர் பட மேக்கிங் வீடியோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. இந்நிலையில், இவரது இன்னோரு வீடியோ தீயாக பரவி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது, ஐயப்ப கடவுள் குறித்த வீடியோ, போட்டோ பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ரஜினி சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதோ வைரலாகி வரும் அந்த பழைய வீடியோ.