ச்ச என்ன மனுஷன்யா.. அந்த மனசு தான் சார்.. சூப்பர்ஸ்டார்ன்னா சும்மாவா.. வைரலாகும் வீடியோ

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்த நடிகை மீனா அவர்களின் கணவர் இறப்பிற்கு நேரில் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தி வந்தார்.

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அன்புள்ள ரஜினிகாந்த், எஜமான், முத்து, வீரா, அண்ணாத்த போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். இதில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar rajinikanth in actress meena husband funeral video getting viral

இந்நிலையில், அவர் நடிகை மீனா வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க ரஜினிகாந்த் அவர்கள் வந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் செம வைரல் ஆனது. அந்த வகையில், அவர் அப்படி வந்து சென்ற போது காலணியை அணிய முற்பட்டபோது, உதவியாளர் அவரது காலணியை அணிய உதவ வரும் போது தடுத்து வேண்டாம் என சொல்லிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post