பிரபல நிகழ்ச்சியின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைத்த சுந்தர் சி ? நல்லாத்தான் இருக்கு !

Sundar c names his upcoming film with tv show name

நகைச்சுவை திரைப்படங்கள் தந்து ரசிகர்களை சிரிப்பலையில் மிதக்க வைப்பவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான வின்னர், கலகலப்பு, முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, அரண்மனை என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தந்தவர். ஆனால், சமீபகாலத்தில் இவர் இயக்கிய ஆக்‌ஷன், அரண்மனை 3 போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

Sundar c names his upcoming film with tv show name

தற்போது இவர் இயக்கத்தில் மீண்டும் ஒரு நகைச்சுவை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா மேனன், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், பிக்பாஸ் சம்யுக்தா, தொகுப்பாளினி டிடி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Sundar c names his upcoming film with tv show name

வின்னர் திரைப்படத்திற்கு பின்னர் 18 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா - சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை நடிகை குஷ்பு தயாரிக்கிறார்.

Sundar c names his upcoming film with tv show name

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘காஃபி வித் காதல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sundar c names his upcoming film with tv show name

Share this post