'சில டைரக்டர்ஸ் பண்றத பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு..' - இயக்குனர் சுந்தர் சி ஆவேச பேச்சு !

Sundar c angry speech on young directors

நகைச்சுவை திரைப்படங்கள் தந்து ரசிகர்களை சிரிப்பலையில் மிதக்க வைப்பவர் இயக்குனர் சுந்தர் சி.

Sundar c angry speech on young directors

இவர் இயக்கத்தில் வெளியான வின்னர், கலகலப்பு, முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, அரண்மனை என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தந்தவர். ஆனால், சமீபகாலத்தில் இவர் இயக்கிய ஆக்‌ஷன், அரண்மனை 3 போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

Sundar c angry speech on young directors

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து, அவர் இயக்கிய திரைப்படம் அரண்மனை 3. ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு நளினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Sundar c angry speech on young directors

சுந்தர் சி ஹீரோவாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் துரை இயக்க படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sundar c angry speech on young directors

கலகலப்பு-2 வெற்றியை தொடர்ந்து, தற்போது, இவர் இயக்கத்தில் மீண்டும் ஒரு நகைச்சுவை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா மேனன், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், பிக்பாஸ் சம்யுக்தா, தொகுப்பாளினி டிடி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Sundar c angry speech on young directors

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுந்தர் சி, ‘சில இயக்குனர்களை பாக்கும்போது வயித்தெரிச்சலா இருக்கு. நம்ம இயக்குனர்கள் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்றத பார்த்தா வாந்தி வர மாதிரி இருக்கு. கதவைத் திறந்தால் ஹீரோயின் நிப்பா அவ கிட்ட லவ்வ சொன்னா ஒத்துப் பங்களா என மைண்ட் வாய்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கு.

Sundar c angry speech on young directors

அது எல்லாம் பார்க்கும் போது ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கும். ஏன் இப்டிலாம் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்ணி பண்றீங்கன்னு கேட்க தோணுது’ என இயக்குனர் சுந்தர் சி ஆவேசமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this post