மீண்டும் வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி? .. அடுத்த படம் சும்மா அதிரவிடப் போகுது..!

sundar-c-and-vadivelu-to-reunite-for-new-movie

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான சுந்தர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் “முறை மாமன்” என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.

sundar-c-and-vadivelu-to-reunite-for-new-movie

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை 4 எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, இதன் பின்னர் இவர் இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் அவரே தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் வடிவேலு நடிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. வடிவேலு இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சுந்தர்சி படத்தில் வடிவேலு நடிக்காமல் இருந்து வந்தார்.

sundar-c-and-vadivelu-to-reunite-for-new-movie

மீண்டும் இவரின் படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் கவுண்டமணியுடன் பணிபுரிந்து வந்தார். பின் வடிவேல் உடன் இணைந்தார். இவர்களுடைய கூட்டணி மாபெரும் அளவில் ஹிட்டானது. ஆனால், திடீரென்று இவர்கள் மோதல் காரணமாக பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், விவேக் மற்றும் சந்தானத்துடன் பணியாற்றி வந்ததால் சந்தானத்தை தனக்கு தெரியாமல் படத்தில் நடிக்க வைத்ததால் சுந்தர் சியிடமிருந்து வடிவேலு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்த சண்டையை தள்ளி வைத்துவிட்டு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this post