கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நம்ம பேவரைட் சன் டிவி சீரியல்கள் !

Sun tv famous serials going to be telecasted on colors tamil channel

வெள்ளித்திரையை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் ஒரு காலத்தில் வரவேற்பை அள்ளி கொண்டு வந்தது. இதில், தமிழ் சின்னத்திரை வரலாற்றில் வருடக் கணக்காக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சேனல் சன் தொலைக்காட்சி. இதில் சித்தி, மெட்டி ஒலி, அண்ணாமலை, சின்ன பாப்பா பெரிய பாப்பா என பல தொடர்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது அனைத்து வயதினரும் ஆண்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் அமைந்தது.

Sun tv famous serials going to be telecasted on colors tamil channel

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு இந்த தொலைக்காட்சி தொடர்களே முக்கிய பொழுதுபோக்காக மாறி இருந்தது.

Sun tv famous serials going to be telecasted on colors tamil channel

இந்நிலையில், இதில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை வென்ற கோலங்கள் மற்றும் தென்றல் தொடரின் மறுஒளிபரப்பு தற்போது கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளது.

Sun tv famous serials going to be telecasted on colors tamil channel

மேலும், திருமதி செல்வம், வாணி ராணி, தெய்வமகள், நாயகி போன்ற தொடர்கள் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post