ரத்தன் டாட்டா கதையை படமாக இயக்கும் சுதா கொங்கரா? ஹீரோ இவர் தானாம்.. அடுத்து ஒரு பிளாக்பஸ்டர்!

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

சிறு வயதிலேயே திரைப்படங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, 2002ம் ஆண்டு ஆங்கிலப் படமான ‘மித்ர், மை ஃபிரண்ட்’ படத்தின் மூலம் கதாசிரியராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சுதா கொங்கரா. பின்னர், பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் சுமார் 7 ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றினார். இதன் பின்னர், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து இவர் இயக்கிய ‘துரோகி’ திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

வலுவான கதையை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என முடிவு செய்த சுதா கொங்கரா, பாக்சிங் கதையை மையமாக வைத்து, நிஜ பாக்சரான ரித்திகா சிங் மற்றும் நடிகர் மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இறுதி சுற்று. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

இதை தொடர்ந்து தெலுங்கில் குரு, அந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை போன்ற படங்களை இயக்கிய இவர், பிரபல விமான நிறுவன தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த சூரரை போற்று திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, பல்வேறு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது. இப்படத்தில் சூர்யா நடித்த சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்னும் இளைஞர்களின் பேவரைட் மற்றும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

இதற்கு நடுவே, வெப் சீரீஸ் ஒன்றில் காளிதாஸ் ஜெயராமன் அவர்களின் வித்தியாசமான நடிப்பில் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். தற்போது சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சுதா கொங்கரா கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில், அக்ஷய் குமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறை தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா, மாதவன் அல்லது அபிஷேக்பச்சன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. அபிஷேக் பச்சன் ஏற்கனவே அம்பானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளதால், இந்த படத்திலும் அவர் நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

sudha kongara to direct ratan tata movie suriya or madhavan to act in lead role

தற்போது இந்த படத்திற்கான முழு ஆய்வு பணிகளில் சுதா இறங்கி உள்ளதாகவும், முழு கதையும் தயார் செய்த பின்னர், இந்த படம் குறித்த அதிகாப் பூர்வ தகவல்களை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this post