எல்லாருக்கும் ரொம்ப நன்றி சொல்லி போட்டோ பதிவிட்ட பாக்கியா.. திடீர்னு ஏன் இப்டி ?

suchitra posts photo thanking baakiyalakshmi serial team

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

suchitra posts photo thanking baakiyalakshmi serial team

பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

suchitra posts photo thanking baakiyalakshmi serial team

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

suchitra posts photo thanking baakiyalakshmi serial team

பாக்கியா - கோபி விவாகரத்து, ராதிகா என தற்போது கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. தற்போது, பாக்கியலட்சுமி சீரியல் 600 எபிசோடுகளை கடந்து விட்டது. இதை பாக்யா தனது இன்ஸ்டா பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி டீமும் உள்ளனர்.

suchitra posts photo thanking baakiyalakshmi serial team

இதில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமரா மேன், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் பாக்யா தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார். மேலும் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this post