உண்மையா உருட்டா?.. விஜய் மகன் படத்தில் இணையும் வாரிசு நட்சத்திரங்கள்..!
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
அதற்குப் பின்னர், இந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால், பலரோ குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் தற்போது இயக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2025ல் தொடங்க உள்ளதாகவும், கதையின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாம். அதோடு, முதல் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா அல்லது சுஷின் ஸ்யாம் கமிட் ஆவார்கள் என தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக இந்த படத்தில், சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். மேலும், அந்த படத்தில் ஹீரோயினாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கப் போகிறார் என்றும் AR ரஹ்மான் மகன் AR அமீன் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு பெயர் நெப்போ கிட்ஸா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.