விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்.. மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்.. வெளியான CCTV காட்சி !
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஷாலுக்கு 40 வயது கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது.
இதன் பின்னர், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது.
விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவர் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்து விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விஷால் வீட்டுக்கு வந்த மர்ம ஷிப்ட் கார் யாருடையது என விசாரித்து வருகிறார்கள். கல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது, நடிகர் விஷால் வெளியூரில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.