'இந்த மாதிரி கேவலமான வேலை பண்ணாதீங்க..' ஸ்க்ரீன்ஷாட் பதிவிட்டு கோபமாக திட்டிய அம்மு அபிராமி!

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த க்ரைம் திரில்லர் திரைப்படம் ராச்சசன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அம்மு அபிராமி. இப்படத்திற்கு முன்னரே, பைரவா, என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

மேலும், துப்பாக்கி முனை, தானா சேர்ந்த கூட்டம், தம்பி, நவரசா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, அசுரன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழியில், யானை, கண்ணகி, நிறங்கள் மூன்று, கனவு மெய்ப்பட, யார் இவர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் பிரபலமாக மக்கள் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். இதுமட்டுமின்றி, 2 மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

இந்நிலையில், தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அம்மு அபிராமி. அதன்படி அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தான் சுற்றுலா சென்ற வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரது யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பி அடித்து போலியாக ஒரு சேனலை தொடங்கி உள்ளார்.

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

அது அம்மு அபிராமியின் சேனல் என நினைத்து ஏராளமானோர் அந்த சேனலை பின் தொடர்ந்தும் வந்துள்ளனர். அப்படி பின் தொடர்ந்த ரசிகர் ஒருவரிடம், தங்களுக்கு ஐபோன் ஒன்றி பரிசு கிடைத்துள்ளதாகவும், அதனை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு டெலிவரி சார்ஜாக ரூ.5000 நீங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நினைத்து அந்த ரசிகரும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

stranger spam using ammu abirami name shocking video posted by her warning fans

பின்னர் தான் அவர் மோசடியில் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் அம்மு அபிராமியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார் அந்த ரசிகர். இதைப்பார்த்து ஷாக் ஆன அம்மு அபிராமி, இந்த நூதன மோசடியை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சில ஸ்கிரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, தயவு செய்து இதுபோல் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என தனது ரசிகர்களை அலர்ட் செய்துள்ளார். நடிகை பெயரில் நடந்த இந்த நூதன மோசடி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post