'புது பொண்டாட்டில்ல.. அப்படித்தான் இருப்பாரு..' உதயநிதி பற்றி கிண்டலத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல் மட்டுமல்லாது சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சினிமா தயாரிப்பாளர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக இருந்த உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெயரில் குருவி, ஆதவன், மன்மதன் அம்பு போன்ற படங்களை தந்துள்ளது.
மேலும், முழு காமெடி திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, கண்ணை நம்பாதே, மாமன்னன், கலகத் தலைவன் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மனைவி கிருத்திகா டைரக்ஷனில் ஒரு படம் நடிக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கும் தனது தந்தையும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு அவர்கள் பேசிய நகைச்சுவையான உரையாடல் குறித்து கூறினார்.
பின்னர், நான் எம்.எல்.ஏவாக ஜெயித்த பின்னர் சில நாட்கள் என் தொகுதியில்தான் முழு நேரமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மற்ற அமைச்சர்கள் அப்பாவிடம் ஃபோன் செய்து, தம்பி என்னங்க இப்படி பண்றாரு. அப்புறம் எங்க தொகுதியிலும் கேப்பாங்க என்று கூற, புது பொண்டாட்டில்ல.. அப்படித்தான் இருப்பாரு என்று கிண்டல் அடித்தாராம். அதாவது, அரசியலுக்கு வந்து ஜெயித்து முதன்முறையாக ஆர்வமாக வேலை பார்த்ததால் என்னை அப்படி கிண்டலடித்தார் என்று கூறிய உதயநிதி அந்தப் பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.