ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மு.க.ஸ்டாலினின் Biopic.. ஸ்டாலினாக நடிக்கும் சமுத்திரக்கனி ?

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர்கள் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

தமிழில், MS தோனி - The Untold Story என கிரிக்கெட் வீரர் தோனி அவர்களின் கதை எடுக்கப்பட்டது.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற வெப் தொடரும், தலைவி என்கிற படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

இந்நிலையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக இருந்தாலும், அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனவர் ஸ்டாலின்.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

இந்த நிலைக்கு வர பல்வேறு போராட்டங்களையும் சந்தித்தது, மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது தொடங்கி தற்போது முதல்வர் ஆனது வரையிலான காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்படுகிறதாம்.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

இப்படத்தை பிரபல நடிகர் போஸ் வெங்கட் தான் இயக்க உள்ளாராம். மேலும், இதில் மு.க.ஸ்டாலினாக சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stalin biopic to direct by bose venkat and samuthirakani to act in lead role

Share this post