படம் ரிலீசிற்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள தவறை சுட்டி காட்டிய ரசிகர்.. இதோ பாருங்க !

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, இவர்கள் குறித்த வீடியோ, glimpse என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

இப்படத்தின் ரிலீஸ் வருகிற 30ம் தேதி நடக்கவிருப்பதால் நடிகர் - நடிகைகள் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் செட் மேக்கிங் வீடியோ, Glimpse வீடியோ, ஷூட்டிங் போட்டோஸ் என வைரலாகி வருகிறது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை என பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

இந்நிலையில், இலங்கை தமிழ் ரசிகர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒரு தவறை கண்டுபிடித்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

பொன்னியின் செல்வன் ஹிந்தி ட்ரைலரில் ‘சிங்கள நாடு’ என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் ‘ஸ்ரீலங்கா’ என்று மாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் என்றும் இலங்கை தமிழர் ஆனால் தான் தற்போது இந்த தவறை சரி செய்யும்மாறு கேட்டு கொள்வதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

srilankan fan wrote letter to lyca production of ponniyin selvan for a change in trailer released

தமிழர்கள் வாழும் இலங்கை என்பது சிங்களர்களின் நாடு என்பதை குறிக்கும் வகையில் சிங்கள நாடு என குறிப்பிட்டுள்ளதால் தான் மிகவும் மன வருத்தம் அடைகிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this post