ரத்தத்தை உறைய வைத்து.. கொலை நடுங்க செய்யும் கொடூர பொம்மை.. Squid game 2 அறிவிப்பு வீடியோ இதோ !

Squid game season 2 announcement video has been released

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வெப்சீரிஸ் ஸ்க்விட் கேம் சீசன் 1 (Squid game). மணி ஹெய்ஸ்ட் சீரீஸ் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.

Squid game season 2 announcement video has been released

சிகப்பு, பச்சை என 2 குரூப் கொண்டு விளையாடும் இந்த Squid gameக்கு சில விதிமுறைகள் உண்டு. அதனை மீறினால், ஒரு ரோபோட் பொம்மை அவர்களை கொடூரமாக கொலை செய்துவிடும். விளையாட்டில் என்ன மாதிரியான விதிமுறை இருந்தாலும் அதை செய்ய வேண்டும். தவறினால், அந்த பொம்மை கையில் சாவது தான் முடிவு.

Squid game season 2 announcement video has been released

இப்படி அந்த விளையாட்டில் யார் யாரெல்லாம் தப்பித்தார்கள்? எப்படி தப்பித்தார்கள்? என்பதை முதல் சீசனில் காண்பித்தனர். ரசிகர்களை கதிகலங்க வைத்த இந்த வெப் சீரிஸ் மீண்டும் தயாராக உள்ளதாக அந்த படக்குழு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

Squid game season 2 announcement video has been released

அந்த வெப்சீரிஸ் இயக்குனர் மற்றும் நெட்பிளிக்ஸ் அண்மையில் இதற்கான தகவலை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களாக இந்த கதையை உருவாக்கினோம். 12 நாட்களில் இந்த வெப்சீரிஸை ஷூட் செய்து முடித்தோம். தற்போது மீண்டும் இதனை உருவாக்க உள்ளோம். அடுத்த சீசன் விரைவாக வர உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Squid game season 2 announcement video has been released

இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். முதல் சீசன் போல இந்த சீசனும் ரசிகர்களை மிகவும் கவரும் என்று ஸ்க்விட் கேம் சீசன் 2 எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this post