'விக்ரம்' படத்தில் 'ரோலெக்ஸ்' மாதிரி.. 'பிரின்ஸ்' பட கிளைமாக்ஸில் பிரபல தமிழ் நடிகர்.. செம ட்விஸ்ட்.. ரகசியம் காத்த படக்குழு!

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

பிரின்ஸ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள ’பிரின்ஸ்’ திரைப்படத்தில் பிரபல நடிகர் க்ளைமாக்ஸ்ல் நடிப்பது குறித்து செம ட்விஸ்ட் ஒன்று வெளியாகியுளளது.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் க்ளைமாக்ஸ்ல் தோன்றி மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் பெற்றார். இதே போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் படத்தில் இவரது நண்பரும் நடிகருமான சூரி ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் 8 படங்களில் இணைந்து நடித்து உள்ள நிலையில் மீண்டும் இந்த படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். சூரி இந்த படத்தில் நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக இதுவரை பார்த்து வைத்து இருந்த நிலையில் தற்போது இந்த ரகசியம் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

special appearance to be made by soori in sivakarthikeyan prince movie

Share this post