எஸ்பிபி சரண் - சோனியா அகர்வால் திருமணம் ? தீயாய் பரவும் புகைப்படம்.. எஸ்பிபி சரண் சொன்ன தகவல் !

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை சோனியா அகர்வால். தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் செம பிரபலம் ஆனார்.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

மேலும், சக்சஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற திரைப்படம் இவர் நடித்ததில் செம ஹிட். இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

பாலக்காடு மாதவன், தடம், அயோக்கியா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். நாணல், மல்லி, அச்சம் தவிர், பாண்டவர் இல்லம், நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

தற்போது, பகீரா, காதலை தேடி நித்யா நந்தா போன்ற தமிழ் படங்களிலும், சில மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார். இது பல யூகங்களுக்கு வழி வகை செய்துள்ளது.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

இந்நிலையில் இந்த புகைப்படம் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டன மற்றும் ரசிகர்கள் இரு பிரபலங்களின் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வந்தனர்.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப், அஞ்சலி உள்ளிட்டோர் உள்ளனர். அதில் வெப் சீரிஸ் மற்றும் பிலிம் புரடக்ஷன் என ஹேஷ் டேக்கும் பதிவிட்டுள்ளார். இதன்படி இந்த போட்டோஸ் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

Spb charan and sonia agarwal marriage rumours on photo getting viral on social media

நடிகை சோனியா அகர்வால், செல்வராகவனை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Share this post