நடிகையை 2ம் திருமணம் செய்த சூரி? இணையத்தில் வெளியான போட்டோ.. ரசிகர்கள் ஷாக்
தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான், விருமன் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சூரி, இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹீரோவாக புதிய படத்தில் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை Anna Ben கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகிவுள்ளார். இந்த படத்தின் பூஜையில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஷாக்காகி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், இது படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அதன்பின் தெரியவந்தது.