நடிகர் சூரி போட்டோ பயன்படுத்தி 'இலவச கல்வி' என போலி விளம்பரம்.. கல்வி நிறுவனம் மீது புகார் செய்த சூரி !

Soori tweets over the fake news rumouring around internet

தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.

Soori tweets over the fake news rumouring around internet

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.

Soori tweets over the fake news rumouring around internet

அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விருமன், விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூரி ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு விளம்பரம் பரவி வருகிறது.

Soori tweets over the fake news rumouring around internet

நடிகர் தற்போது ட்விட்டரில் இது ஒரு வதந்தி என அதனை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்த விளம்பரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Soori tweets over the fake news rumouring around internet

அந்த விளம்பரத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மதுரையில் உள்ள கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் நிதியை பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அந்த விளம்பரம் போலியானது என்று நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Soori tweets over the fake news rumouring around internet

மேலும், மதுரையில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், “மாணவர்களுக்கு கல்வியைத் தொடர நாங்கள் செய்யும் உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலவச கல்வி நிதி வழங்குகிறோம், கல்வியை வியாபாரமாக்குகிறோம் என்ற போர்வையில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. என்று எச்சரித்துள்ளார்.

Soori tweets over the fake news rumouring around internet

Share this post