கழுத்தில் விபூதி.. கையில் சிகரெட்.. எங்களுக்கே பாக்க டென்ஷனா இருக்கு.. சூரியின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான், விருமன் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூரியை ஹீரோவாக நடிக்க, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுகாளி’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. ஒரு சேவலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. அந்த டீசரில் சூரி, கழுத்தில் விபூதி பட்டை, கையில் சிகரெட் என வித்தியாசமான லுக்கில் உள்ளார். இப்படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பி எஸ் வினோத் ராஜ் இயக்க உள்ளார்.
We proudly present the first look tease of #Kottukkaali 😊👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 10, 2023
Written & directed by @PsVinothraj
Starring @sooriofficial & @benanna_love 👍@KalaiArasu_ @SKProdOffl @sakthidreamer @thecutsmaker pic.twitter.com/kO51HUXt67