நடிகை சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணம்? வைரலாகும் போட்டோ..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை சோனியா அகர்வால். தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் செம பிரபலம் ஆனார்.
மேலும், சக்சஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற திரைப்படம் இவர் நடித்ததில் செம ஹிட். இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பாலக்காடு மாதவன், தடம், அயோக்கியா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். நாணல், மல்லி, அச்சம் தவிர், பாண்டவர் இல்லம், நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, பகீரா, காதலை தேடி நித்யா நந்தா போன்ற தமிழ் படங்களிலும், சில மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது, தனது கையில் மெஹந்தி போட்டிருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்து மீண்டும் திருமணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு என்னுடைய திருமண மெஹந்தி இவ்வளவு எளிமையாக இருக்காது என்று சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார். அவரின் மெஹந்தி புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.