Viral Video: ‘நல்லா போற சீரியல் ஏன் இப்படி’.. ரக்ஷிதாவின் நடிக்கும் சீரியலின் திடீர் அறிவிப்பால் புலம்பும் ரசிகர்கள் !

solla marantha kathai serial to end soon video getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

solla marantha kathai serial to end soon video getting viral

தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

solla marantha kathai serial to end soon video getting viral

தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

solla marantha kathai serial to end soon video getting viral

இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார்.

solla marantha kathai serial to end soon video getting viral

தற்போது சொல்ல மறந்த கதை நடித்து வரும் சீரியல் கேரக்டர் தன் சொந்த வாழ்வோடு ஒத்துப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

solla marantha kathai serial to end soon video getting viral

தற்போது அவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த இயக்குனர் யார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

solla marantha kathai serial to end soon video getting viral

சமீபகாலமாக சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரச்சிதாவை பெரும்பாலும் புடவை அணிந்தபடியே பார்த்த ரசிகர்கள், அவரின் கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.

solla marantha kathai serial to end soon video getting viral

தற்போது இவர் நடித்து வரும் சொல்ல மறந்த கதை சீரியல் முடிய இருப்பதாக திடீரென்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

solla marantha kathai serial to end soon video getting viral

சீரியல் தொடங்கி 1 வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அதற்குள் சீரியலை முடிக்க என்ன காரணம்? என கேட்டு வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டு இருக்கும் சீரியலை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Share this post