வரலக்ஷ்மி பூஜையில் மகாலக்ஷ்மி போல் போஸ் கொடுத்த சினேகா - வைரலாகும் போட்டோஸ்!
நடிகை சினேகா பல வருடங்களுக்கு பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அப்பா விஜய்யின் மனைவியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் படம் முழுக்க சினேகாவின் கேரக்டர் ட்ராவல் செய்யும்படி இந்த கோட் திரைப்படம் இருக்கிறது.
இதனால் இந்த படம் சினேகாவுக்கு மிகப்பெரிய மயில்களாக அமையும் என அவர் பேட்டிகளில் கூறினார் முன்னதாக சினேகா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து 2000 காலகட்டங்களில் பிரபலமான நட்சத்திர நடிகையாக புன்னகை அரசியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார் .
இவரது நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் என்னவளே இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியாக்கியது. தொடர்ந்து பார்த்தாலே பரவசம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக இடம் பிடித்தார் இதனிடையே பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .
பிள்ளைகள் பிறப்புக்கு பிறகு சினேகா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சினேகா வரலட்சுமி பூஜை தினத்தில் மகாலட்சுமி போல் அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக்கொண்டு லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் அத்தனை பேரையும் வசீகரித்து இழுத்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.