பிரசன்னா - சினேகா விவாகரத்தா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க சினேகா போட்ட பதிவு!

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் பலரது கனவுக்கன்னியாக இருந்த இவர், இங்கனே ஒரு நிலபக்ஷி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, என்னவளே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

தெலுங்கில், பிரியமைனா நீக்கு என்னும் சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமான இவர், வெங்கி, ராதா கோபாலம், ஸ்ரீ ராமதாசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஒரு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

உன்னை நினைத்து படத்திற்காக பிலிம்பேர் விருதினையும், விரும்புகிறேன், ஆனந்தம், புன்னகை தேசம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களுக்காக விஜய் விருது மற்றும் தமிழக தேசிய விருதையும் பெற்றார். இப்படி 25திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தும் வருகிறார்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

இதற்கிடையே, 2009ம் ஆண்டு பிரசன்னா உடன் இவர் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர, இருவீட்டாரின் சம்மதத்துடன், 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 1 மகளும் 1 மகனும் உள்ளனர். இறுதியாக பட்டாசு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் பிரசன்னா - ஸ்னேஹா, சமீபத்தில் தங்களின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதோடு இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதில் தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

எக்கச்சக்கமான ரசிகர்கள் இவர்களை பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் சினேகா – பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சில நாட்களாகவே இணையத்தில் பிரசன்னா – சினேகா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கூடிய விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வைரலாகி இருந்தது.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சினேகா தன்னுடைய சோசியல் மீடியாவில் பிரசன்னாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ‘ஹாப்பி வீக்கென்ட்’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் மூலம் இவர்களுடைய விவாகரத்து குறித்த செய்தி அனைத்தும் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், ரசிகர்கள் பலரும் இவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தயவு செய்து இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

sneha posts selfie photo to stop rumours spreading about divorce

Share this post