'குஷி 2..வாலி 2.. ஐடியா இருக்கு !' எஸ்.ஜே.சூர்யா பேட்டியில் சொன்ன செம அப்டேட் !

Sj surya about kushi 2 vaali 2 film update

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இப்படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கடந்த 5 வருடங்களாக, சிறந்த கதையாக இருந்தால் வில்லன் கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்து வருகிறார்.

Sj surya about kushi 2 vaali 2 film update

இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படத்திற்காக நிறைய பேட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அப்போது, ஒரு பேட்டியில், அவரிடம் நீங்கள் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த குஷி, வாலி படத்தின் 2ம் பாகம் வருமா? என கேள்வி கேட்க, அதற்கு எஸ் ஜே சூர்யா, ‘இருக்கு குஷி 2, வாலி 2 பண்ண ஐடியா இருக்கு. ஆனால், இன்னும் கதை எழுதவில்லை’ என கூறினார்.

தற்போது எஸ் ஜே சூர்யா நடிப்பில் ,முழு நேரம் இறங்கியுள்ளதால், விரைவில் இயக்கத்தை தொடங்கி மீண்டும் ஹிட் படங்களை கொடுக்க வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Sj surya about kushi 2 vaali 2 film update

Share this post