கோமாளிகளை விட குக் லிஸ்ட் தான் செம interesting'ஆ இருக்கு.. 'வலிமை' பட நடிகர், பிக்பாஸ் போட்டியாளர் என வெளியான CWC 4 குக் லிஸ்ட்
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
தற்போது, பிக்பாஸ் சீசன் 6 முடிவடைந்த நிலையில், குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்த அதிகாரபூர்வ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அந்த வீடியோ வைத்து பார்க்கையில், 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளனர்.
கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், பாலா, குரேசி ஆகியோர் படங்களில் பிசியானதால் அவர்கள் இந்த சீசனில் கலந்துகொள்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
இந்த சீசனுக்கான புரோமோவில் சிவாங்கியும் இடம்பெறவில்லை என்பதால் அவரும் கலந்து கொள்ளமாட்டார் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக அவர் இந்த சீசனில் குக் ஆக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பா, பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மற்றும் நடிகையுமான ஷெரின் மற்றும் ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ரா, நாய்சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகர் விஜே விஷால் ஆகியோருக்கு குக் ஆக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.