சிம்பிளாக நடந்த பெயர் சூட்டு விழா.. 3வது மகன் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்..! (Video)

Sivakarthikeyan's son's naming ceremony

தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அது டி இமான் தான். இது ஒரு புறம் இருக்க அனிருத் சிட்டி மக்களை கவர உதவ சிவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர். இப்படி ஒரு நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பானது மோதலாக வெளியாகி குடும்ப பிரச்சினையாகவும் வெளியே தெரிந்தது. சிவகார்த்திகேயன் இமேஜ் மீது விழுந்த அது பெரும் அடியாக அமைந்தது. அப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை எது என்பதை யாருக்கும் தற்போது வரை தெரியாத சஸ்பென்ஸ் ஆக இருந்து வருகிறது.

Sivakarthikeyan's son's naming ceremony

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி திரைக்கு வந்தது. அடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் நடித்து வருகிறார். இதில், வில்லனாக அண்மையின் வித்யூஜம்பால் இணைந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகர்த்திகேயன் தனக்கு மூணாவது மகன் பிறந்திருக்கிறார் என சந்தோஷ செய்தியை வெளியிட்ட ரசிகர்களும் அதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். தற்போது, தனது மூணாவது மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அழகான வீடியோவுடன் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

Share this post