ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன்..? 'தலைவர் 169'ல் ஒரு கலக்கல் காம்போ..?

Sivakarthikeyan to act as rajinikanth son in thalaivar 169

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு பின்னர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு பெயர் இன்னும் முடிவாகவில்லை.

Sivakarthikeyan to act as rajinikanth son in thalaivar 169

இதனால், தலைவர் 169 என பெயரிட்டுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என பல தகவல்கள் சமூக வலைதளபக்கங்களில் உலா வந்தன. தற்போது, ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan to act as rajinikanth son in thalaivar 169

ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post