சூப்பர்ஸ்டாருடன் சிவகார்த்திகேயன்.. நெகிழ்ச்சியில் SK வெளியிட்ட புகைப்படம் !

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

டான் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களின் Reference ஆங்காங்கே இருந்துள்ளது ரசிகர்கள் விசில் பறக்கும் அளவிற்கு இருந்தது அனைவரும் அறிவர்.

படத்தின் துவக்க காட்சிகளில் வகுப்பறையில் எந்திரன் படத்தை சிவகார்த்திகேயன் பார்ப்பது முதல் Reference அமைந்துள்ளது. முதல் பாதியின் 30 நிமிடங்களை கடந்த பின் சக்கரவர்த்தியும் (சிவகார்த்திகேயன்) - அங்கையற்கன்னியும் (பிரியங்கா மோகன்) படம் பார்க்க தியேட்டருக்கு செல்வர்.

அப்போது அங்கு சிவாஜி திரைப்படம் ஒடிக்கொண்டு இருக்கும். அடுத்த காட்சியில் சிவகார்த்திகேயன், சிவாஜி பட ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்து அசத்தியிருப்பார்.

கல்லூரி விழாவில் ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தின் “நான் பொல்லாதவன்” பாடலை பிரத்யேகமாக இசைத்து சிவகார்த்திகேயன் & நண்பர்கள் நடனமாடுவார்கள்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

இதனை சுட்டிக்காட்டி சிவகார்த்திகேயன், எந்த அளவிற்கு ரஜினி ரசிகர் என கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 100 கோடி பிளாக்பஸ்டர் தாண்டி வெற்றி வசூல் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அண்மையில் படக்குழுவை போனில் அழைத்து ரஜினி பாராட்டி இருந்தார். மேலும் அப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் போது எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தியதாகவும் அவர் கூறி இருந்தார்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து: இந்திய சினிமாவின் டான் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றேன்.

அந்த 60 நிமிடங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நேரம் ஒதுக்கி, பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு நன்றி தலைவா” என பதிவிட்டிருந்தார்.

Sivakarthikeyan shares tweet and photo with rajinikanth after don success meet

Share this post