'அந்த படம் வெளிவரும் வரை வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டேன்' விஜய்க்காக SK போட்ட ட்வீட் வைரல் !

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியது.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

இந்நிலையில், விஜய்யின் தலைவா படம் குறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அரசியல் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது. அதில், விஜய் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி இருந்த தலைவா திரைப்படமும் ஒன்று. இந்த படத்தின் தலைவா தான் பிரச்சனை என்று அந்த படம் வெளிவருவதில் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

இதனால் தலைவா படம் வெளியாவது குறித்த தேதி பல சிக்கல்கள் ஏற்பட்டது. மேலும், தலைவா திரைப்படம் குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் தலைவா படம் குறித்து ட்வ்ட் போட்டிருந்தார். அதில் அவர், ‘தலைவா திரைப்படம் வெளியாகும் வரை மற்ற எந்த ஒரு படங்களையும் வரை போவது இல்லை. என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை? ஆனால், தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் செய்து வருகின்றனர்.

Sivakarthikeyan posts about thalapathy vijay thalaivaa movie

Share this post