ஆளே கொஞ்சம் குண்டான மாதிரி இருக்காரே ? SKவின் மாவீரன் பட கெட்டப் ? காட்டுத் தீயாய் பரவும் போட்டோஸ் !

Sivakarthikeyan new look photos getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Sivakarthikeyan new look photos getting viral on social media

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan new look photos getting viral on social media

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவராக திகழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இவரது திரைப்பட வசூல்களும், சம்பளமும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது வித்தியாசமான புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

Sivakarthikeyan new look photos getting viral on social media

பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக மாவீரன் எனும் படத்தில் நடிக்க போகிறாரா சிவகார்த்திகேயன் என்றும் அதற்கான கெட்டப் தான் இதுவா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் தள்ளிப் போயுள்ள நிலையில், அதன் கிளைமக்ஸ் காட்சிக்காக இந்த கெட்டப்பா? என்று ரசிகர்கள் பிரின்ஸ் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan new look photos getting viral on social media

Sivakarthikeyan new look photos getting viral on social media

Share this post