ப்ளூசட்டை மாறனை கலாய்த்து மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன் ! வைரலாகும் வீடியோ !

Sivakarthikeyan mimicry video like bluesattai maaran video getting viral

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan mimicry video like bluesattai maaran video getting viral

ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது. இத்திரைப்படம் மே மாதம் 13ம் தேதி அதாவது இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி.

பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படத்தை, ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவிட்டிருந்தது மிக வைரல் ஆனது.

இதனைத் தொடர்ந்து, தற்போது, ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post