குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் SK.. 'Don' ப்ரொமோஷன்-ஆ ? வைரலாகும் போட்டோஸ் !

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

2 சீசன்கள் கடந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் பங்கேற்ற நிறைய பிரபலங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் புகழ் பார்த்து நிறைய படக்குழுவினர் தங்கள் படத்தின் ப்ரோமோஷன்காக அவ்வப்போது இந்த நிகழ்ச்சிக்கு வருவது உண்டு.

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

அந்த வகையில், இந்த சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டான்.

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

இப்படத்தில் பிரியங்கா மோகன், ஷிவாங்கி, ஆர் ஜே விஜய், பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், குக் வித் கோமாளி செட்டில் sk இருப்பது போல போட்டோ செம வைரல் ஆகி வருகிறது.

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

டான் படத்தின் புரொமோஷனுக்காக தான் அவர் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவருடன் டான் திரைப்பட பிரபலங்களும் வந்துள்ளார்கள் என சமூக வலைத்தளங்களில் போட்டோவுடன் தகவல் வைரல் ஆகி வருகிறது.

Sivakarthikeyan in cwc 3 set for don promotion

Share this post