மறைந்த தன் அப்பா கையில் தனது மகன்.. கண் கலங்கிய SK.. வைரலாகும் புகைப்படம் ! நெகிழ்ச்சியான சம்பவம் !

Sivakarthikeyan feels emotional on seeing his son in his father hands fan made drawing

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan feels emotional on seeing his son in his father hands fan made drawing

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு போராடி வந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் அவரது தந்தையின் மரணம் தான். இதுகுறித்து எப்போதும் சிவகார்த்திகேயன் முக்கியமான மேடைகளில் தனது அப்பாவை குறித்து பேசுவது வழக்கம்.

இவர் தனது சொந்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், ஒரு மகன் பிறந்துள்ளார். அதற்கு தனது தந்தையே திரும்பி வந்ததாக அவர் அந்த சமயத்தில் பதிவை வெளியிட்டிருந்தார்.

Sivakarthikeyan feels emotional on seeing his son in his father hands fan made drawing

இந்நிலையில், தனது தந்தை குறித்தான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

டான் படத்தின் புரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில், எனது மகனை அப்பா கொஞ்சுவதை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

அந்த ஆசையை ஒரு ரசிகர் புகைப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார். அதைப்பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை, அவ்வளவு இன்ப அதிர்ச்சியாக சந்தோஷமாக இருந்தது என கூறியுள்ளார்.

Sivakarthikeyan feels emotional on seeing his son in his father hands fan made drawing

Share this post