என்னப்பா ட்ரைலர்-லேயே அழுக வெச்சுட்டிங்க.. இதுல அரசியல் பேச்சு வேற.. வைரலாகும் Don Trailer

Sivakarthikeyan don trailer getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், தற்போது நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் திரையுலகில் பிரபலம் ஆகியுள்ளார்.

Sivakarthikeyan don trailer getting viral on social media

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் செம வரவேற்பை பெற்றது. தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan don trailer getting viral on social media

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, மனோபாலா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan don trailer getting viral on social media

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து Bae, ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி போன்ற 3 படங்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Sivakarthikeyan don trailer getting viral on social media

அதில் அரசியல், காலேஜ் லைஃப், காதல், ரகளை என சகலமும் உள்ள நிலையில், ட்ரைலரிலே மிரட்டலான சீன்கள், அழுகை என இருந்ததை பார்த்து ட்ரைலரிலே அழுக வெச்சுட்டிங்க என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Share this post