கெஞ்சி கேட்கிறேன் கால வேணும்னாலும் விழுகிறேன்.. இமானிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்..!
இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கூட்டணியில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர்களுக்கிடையேயான விரிசலை பற்றி பேசிய இமான், இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். மேலும், பிரச்சினை என்ன என்பதை விளக்காமல், சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் தனக்கு துரோகம் செய்ததாக இமான் வெளிப்படுத்தினார்.
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், இசையமைப்பாளர் இமான் பல சார்ட்பஸ்டர் ஹிட்களை கொடுத்து இருந்தார். அவை இன்னும் அனைவரின் பிளேலிஸ்ட்களிலும் இருந்து வருகின்றன. இருப்பினும், அவர்கள் இணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில், வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயனுடன் தான் பேசவில்லை என்பதை இமான் ஒப்புக்கொண்டார்.
மேலும், “இந்த ஜென்மத்தில் அவருடன் ஒத்துழைப்பது கடினம். இது தனிப்பட்ட காரணம் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஒருவேளை, அவர் ஒரு நடிகராக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால், ஒன்றாக வேலை செய்யயலாம்.” என தெரிவித்துள்ளார்.
விஷயம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுகள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.
இது குறித்து பேசிய பிஸ்மி சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நடந்த மோதலுக்கு காரணம் குடும்ப பிரச்சனை தான் என்றும், சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாகவும், வீட்ல தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் என்று கூறிய போது உடனடியாக இமான் அப்ப நீங்க எனக்கு பண்ணும் போது உங்களுக்கு தெரியலையா என்று கூறி உடனடியாக போனை கட் செய்து விட்டதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.