அஜித்துடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த SK.. விமர்சனத்திற்கு உள்ளான போட்டோ.. ஏன் தெரியுமா?
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.
இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
அஜித் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ளாததால் அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அதே போல அஜித்தின் புகைப்படங்கள் கூட வெளியவது அரிதான விஷயம் தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு பைக்கிலேயே பல இடங்களுக்கு சென்று வருகிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அடிக்கடி வெளியாகி கொண்டு இருந்தது.
அதிலும் குறிப்பாக விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் போது தான் அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதே போல விஜய்யின் பிறந்தநாளில் கூட அஜித் குறித்த ஹேஷ் டெக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. அதனால் விஜய்க்கு போட்டியாக அஜித்தே தனது Pr களை வைத்து இப்படி புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.
அதில் ‘தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க’ என்று பதிவிட்டு இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்தாலும், அவரின் பதிவிற்கு ஆதரகவாக பல விஜய் ரசிகர்கள் கமன்ட் செய்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் “நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இந்த புகைப்படம் கடந்த மாதேமே எடுத்த புகைப்படம் என்றும் அஜித் தன்னை விளம்பரம்படுத்திகொள்ளவே இப்படி பிரபலங்களை விளம்பரம் செய்துகொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சமீபத்தில் கூட அஜித் ‘நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை‘ என்று கூறியதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க அஜித்துடன் ஒரு மாதத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தற்போது பதிவிட்டது ஏன் என்றும் அஜித் தன் படத்திற்கு விளம்பரம் செய்யவே இப்படி செய்கிறாரா என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.