SKவின் 'பிரின்ஸ்' பட இயக்குனருக்கு இப்படி ஒரு அரியவகை நோயா? வெளியான அதிர்ச்சி தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.
இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.
தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.
மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. புதுச்சேரியில் அமைந்துள்ள, மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கும் பிரிட்டிஷ் பெண்ணான மரியா ர்யபோஷாப்கா மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய முயற்சிப்பதை மிகவும் காமெடியாக இயக்கி இருந்தார் இயக்குனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் தனக்கு இருக்கும், அரியவகை நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு Highly Sensitive Person என்ற நோய் பாதிப்பு உள்ளதாம். இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காபி குடித்தால், இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடுமாம்.
அதிக ஒளி, அதிக நெடி, போன்றவற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ளவோ, அந்த சூழலில் சுவாசிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள மையோசிட்டி பிரச்சனை குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து அனுதீப் தனக்குள்ள பிரச்சனை குறித்து பேசி ஷாக் கொடுத்துள்ளார்.