'சாய் பல்லவி வளைஞ்சி நெளிஞ்சி ஆடுவாங்க.. நீங்க எப்படி சமாளிப்பீங்க..?' SK பேட்டி வீடியோ வைரல் !

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியுள்ளது.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் டான் திரைப்படம், தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK20, SK21, அயலான் போன்ற படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. தற்போது SK20 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தை தொடர்ந்து அவரின் 21வது படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. சாய் பல்லவி கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் Sk21 படத்தின் டைட்டில் மாவீரன் என கூறியிருந்தது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் பேட்டியில் SK21 பற்றி பேசியது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

அதில் அவரிடம், இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். அவருடன் வளைந்து நெளிந்து நடனமாடுவது பற்றி யோசித்தீர்களா? என கேட்டதற்கு சிவகார்த்திகேயன் யோசித்துப் கூறியிருந்தது, கஷ்டம் தான் பார்க்கலாம் என கூறியிருந்தார். இந்த படத்தில் நிறைய விஷயங்கள் சேலஞ்சாக இருக்கு. அதில் ஒன்று தான் சாய்பல்லவி உடன் நடனம் ஆடுவது என்றும் கூறி இருந்தார்.

Sivakarthikeyan about dancing with sai pallavi video getting viral

இந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் , சிவகார்த்திகேயன் நடன ஆடிய வீடியோவை பதிவிட்டு, யாருகிட்ட என்ன கேள்வி கேக்கறீங்க, அவர் சூப்பர் டான்சர், சாய் பல்லவி வளைஞ்சி நெளிஞ்சி ஆடுவாங்க, தலைவன் வெறித்தனமாக ஆடுவார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post