ஏஜென்டே 'அவங்கதான்' கவர்மெண்டுக்கும் இதுல பங்கு போகுது; சுசித்ரா சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்..!
தமிழ் திரையுலகில் பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகை என பன்முக திறமைகள் கொண்டவர் நடிகை சுசித்ரா. இவர் இவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை பிரிந்ததற்கு காரணம் அந்த சமயத்தில், சுசி லீக்ஸ் என்கிற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியான இந்த விவகாரத்தால் தமிழ் சினிமாவே ஷாக் ஆனது.
பின்னர், இந்த பிரச்சனைக்கு பிறகு சினிமாவிலிருந்து ஆள் அட்ரஸ் தெரியாமல் சுசித்ரா காணாமல் போனார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சுசித்ரா. தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி மீண்டும் பல்வேறு விஷயங்களை கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அதில், முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் தாயார் குறித்தும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அதில், என்னுடைய முதல் கணவர் கார்த்திக் குமாரின் அம்மா சுத்த வேஸ்ட் அவர் உண்மையானவர் இல்லை.
நிறைய ஃப்ராடு வேலைகளை செய்திருக்கிறார். அனாதை குழந்தைகளை விக்கிறது உட்பட நிறைய ஃப்ராடு வேலைகளை செய்திருக்கிறார். இதிலிருந்து, அரசுக்கும் கட்டுப் போகிறது. அதனால், அவரை கைது பண்ண முடியாது. ஓரினச்சேர்க்கையாளரான கார்த்திக் குமாரை நான் திருமணம் செய்து கொண்டதால், நான் ஏதோ அமுக்கப்பட்ட கோழினு அவங்க நினைச்சுட்டாங்க, வீட்டிற்குள் திருமணத்திற்கு எதிராக சண்டைகள் போட்டுட்டு இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்.
எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கும் கல்யாணம் ஆகணும் அவர்களுடைய எதிர்காலம் கெட்டுப் போக கூடாது என்பதற்காக நான் இவ்வளவு நாளா நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடாமல் இருந்தேன். என் தங்கச்சிக்கு இப்போ கல்யாணம் ஆனதால், இதை நான் தைரியமாக பேசுகிறேன் என சுசித்ரா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, சுசித்ரா பேசியது தொடர்பாக, கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கார்த்திக் குமார் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிட சுசித்ராவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.