ஜானகி அம்மாவை ஓரம் கட்டிய பிரபல தமிழ் பாடகி.. அட கடவுளே.. வெளியான உண்மை தகவல்!

Nightingale of South India, இசைக்குயில் என இந்திய திரையுலகில் பிரபலமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுபவர் ஜானகி அம்மா. திரைப்படங்கள், சீரியல் தொடர்கள், ஆல்பம் என 17 மொழிகளில் கிட்டத்தட்ட 10,000திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரின் பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் இசையில் தான் பாடியிருக்கிறார். அதிலும் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான படங்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது ஜானகி அம்மாவின் பாடல்கள்.
60 முதல் 80 வரை P. B. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜெயச்சந்திரன் என பல முன்னணி பாடகர்களுடன் பாடல்கள் பாடியுள்ளார். அப்படி உச்சத்தில் இருந்த ஜானகி அவர்களின் கேரியரை உடைய வைத்தது சித்ராவின் குரல். 90களில் ஆரம்பத்தில் சித்ராவின் குரல் மிகவும் கவர்ந்திழுத்ததால் பல இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அவர் பக்கம் சென்று ஜானகியை ஒதுக்கி வைத்தனர்.
ரகுமான் இசையில் ஒருக்கட்டத்தில் ஜானகி அம்மாவால் ஈடு கொடுக்கமுடியாமல் போக சித்ராவின் குரல் ஓங்கியது. இப்படியிருக்கையில் ஜானகி - எஸ்பிபி என்று இருந்த காம்போ போகப்போக சித்ரா - எஸ்பிபி என்று மாறியது. இதனால், ஜானகி அவர்கள் 2016ல் மலையாள சினிமாவில் ஒரு தாலாட்டு பாடல் பாடிவிட்டு இனிமேல் பாடல் பாடப்போவதில்லை என்ற முடிவெடுத்தாராம்.