'ஒருத்தர் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே..' சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசிய சிம்பு

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

பிரின்ஸ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு முன்பு டிவி ஷோவில் இருந்த போது, சில நடிகர்களை கலாய்த்து பேசியுள்ளார். அதில் சிம்புவும் இருந்தார், அதை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதுக்குறித்து சிம்புவே சில வருடங்களுக்கு முன்பு பேசியுள்ளார்.

simbu supports sivakarthikeyan for an issue information getting viral

’ சிவகார்த்திகேயன் உழைத்து அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் வெற்றியில் எனக்கும் சந்தோஷம், நானே போன் செய்து பாராட்டினேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் ‘ என பேசியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post